கும்பாபிஷேகம் ..

கடலுார்; ஈச்சங்காடு முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

கடலுார் அடுத்த ஈச்சங்காடு கிராமம் புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலையாக சாலையிலிருந்து கடம் புறப்பாடாகி, கோபுரங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை பா.ம.க. மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன், கமிட்டி நிர்வாகிகள் முன்னாள் ஊராட்சி தலைவர் செந்தாமரைக்கண்ணன், செயலாளர் சேகர், பலராமன், சக்ரவர்த்தி, வெங்கடேசன், நாகராஜன், குமார், ராஜலிங்கம் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.

Advertisement