மாவட்டத்தில் 'நீட்' தேர்வு: 4,560 மாணவர்கள் எழுதினர்

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு நடந்தது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., போன்ற படிப்புகளில் சேர 'நீட்' நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் மாணவ, மாணவியர் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

2025-26ம் கல்வியாண்டிற்கான 'நீட்' தேர்வு நேற்று நடந்தது. கடலுார் மாவட்டத்தில் இருந்து 4,560 மாணவ மாணவியர் விண்ணப்பித்தனர்.

கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 729 பேர், பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 480, குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி., மேல்நிலைப்பள்ளியில் 480, நெய்வேலி கேந்திரியா வித்யாலயா பள்ளியில் 600, பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரியில் 600 பேர் என மொத்தம் 8 மையங்களில் 4,560 மாணவ, மாணவியர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியர் காலை 11:00 மணி முதல் தேர்வு மையத்திற்கு வரத் துவங்கினர். தேர்வு நுழைவுச்சீட்டு, ஆதார், போட்டோ உள்ளிட்ட ஆவணங்கள் சரி பார்த்து அனுப்பப்பட்டனர். அனைத்து மையங்களிலும், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. தேர்வு மதியம் 2:00 மணிக்கு துவங்கி மாலை 5:30 மணிக்கு முடிந்தது. தேர்வு விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதினர்.

Advertisement