தார்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகளால் இடையூறு

பொன்விளைந்தகளத்துார்செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலையம் செங்கல்பட்டு அடுத்த மலையடி வேண்பாக்கம் பகுதியில் 9.95 ஏக்கர் பரப்பளவில் 97 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்காக கனிமவளத்துறை அதிகாரிகளிடம் அனுமதிபெறபட்டு பொன் விளைந்த களத்துார் ஏரியில் மண் எடுக்கப்பட்டு டாரஸ் லாரிகள் கிராவல் மண் கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு -- பொன்விளைந்த களத்துார் சாலையில் கண்டிகை வழியாக 50க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருவதால் சாலை முழுதும் புழுதி பறந்து சக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

இந்த சாலையில் செல்லும் லாரிகள் தார்பாய் மூடாமல் வேகமாக கிராமங்கள் வழியாக செல்கின்றன.

வ.உ.சி., நகர், மோசிவாக்கம் கிராம மக்கள் அவதியடைந்து விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

சாலை முழுதும் மண் பரவி காற்றில் பறப்பதால் வாகன ஓட்டிகள் கண்களை பதம் பார்க்கின்றன. எனவே லாரிகள் தார்பாய் மூடி செல்லவும், சாலை புழுதி பறக்காமல் இருக்க சாலையில் தண்ணீர் விடவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement