விழிப்புணர்வு ஊர்வலம்

நடுவீரப்பட்டு; பண்ருட்டியில் மே தினத்தையொட்டி வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தாசில்தார் பிரகாஷ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சவுதாபேகம் முன்னிலை வகித்தார்.

ஊர்வலம் தாசில்தார் அலுவலகத்தில் துவங்கி, பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு வரை நடந்தது.

பேரணியில் பங்கேற்றவர்கள் வாக்களிப்பதே சிறந்தது; நிச்சயம் வாக்களிப்பேன் போன்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

காடாம்புலியூர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டன.

Advertisement