தேவநாத சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம்

கடலுார்; கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் சித்திரை பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவம் விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம்.
இந்தாண்டு சித்திரை பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று காலை ஸ்ரீதேவி, பூ தேவியுடன் தேவநாத சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின், மங்கள வாத்தியத்துடன் கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தினமும் சுவாமி வீதியுலா நடக்கிறது.
வரும் 7ம் தேதி வேணுகோபாலன் சேவையில் தங்க விமானத்திலும், தங்க பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்திலும் வீதியுலா நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். வரும் 16ம் தேதி விழா நடக்கிறது.
மேலும்
-
புதிய ஐ.எம்.எப்., செயல் இயக்குநராக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்; இவர் யார் தெரியுமா?
-
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
-
செங்கோட்டை மட்டும் போதுமா? பதேபூர் சிக்ரி வேண்டாமா? பேராசை பெண்ணுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
-
சாலை பள்ளத்தில் தம்பதி பலியான விவகாரம்; ஒப்பந்ததாரர் 4 பேர் மீது வழக்கு
-
ஹிந்துக்கள் வெளியேற கனடாவில் காலிஸ்தான் பேரணி ; மோடியை கேலி செய்து சித்திரம்
-
சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை: ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி