வீரபாண்டி பாலத்தில் கார்களால் இடையூறு

தேனி : வீரபாண்டி ஆற்றுப்பாலத்தில் இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை சரி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 6ல் துவங்குகிறது. தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

வெயிலின் தாக்கத்தால் வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் நீராட வரும் பொது மக்கள் பலரும் குடும்பத்துடன் வருகின்றனர்.

இவர்கள் பலர் ஆற்றுப் பாலத்தின் இடது புறம் கார்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் இந்த பாலத்தில் மற்ற வாகனங்களை செல்ல சிரமப்படுகின்றனர்.

சில இளைஞர்கள் ஆற்றுப்பாலத்தில் டூவீலர் ஓட்டி 'ரீல்ஸ்', புகைப்படம் எடுக்கின்றனர். இதனால் விபத்து அபாயம் தொடர்கிறது.

கார்களை அருகில் உள்ள காலி இடம் அல்லது வாகன நிறுத்தத்தில் நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement