புகார் பெட்டி புதுச்சேரி

பன்றி அட்டகாசம்

உறுவையாறில், குடியிருப்போர் தோட்டங்களில் வளர்க்கும் செடிகளை பன்றிகள் நாசப்படுத்தி வருவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மீனாட்சி, உறுவையாறு.

போக்குவரத்து நெரிசல்

கொக்குபார்க் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

ராணி, புதுச்சேரி.

கூடுதல் டிராபிக் போலீஸ் தேவை

இ.சி.ஆர்., லாஸ்பேட்டை, கிருஷ்ணா நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், கூடுதலாக போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும்.

பாஸ்கர், லாஸ்பேட்டை.

நிழற்குடை இன்றி மக்கள் அவதி

தவளக்குப்பம் சந்திப்பில், பயணிகள் நிழற்குடை இல்லாமல் வெயிலில் நின்று மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கலையரசன், தவளக்குப்பம்.

Advertisement