இந்திய அணி 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில்

துபாய்: ஐ.சி.சி., தரவரிசையில் (ஒருநாள், 'டி-20') இந்திய அணி 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது.
டெஸ்ட், ஒருநாள், 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதற்காக, கடந்த ஆண்டு மே மாதம் முதல் விளையாடிய 100 சதவீத போட்டிகளும், அதற்கு முந்தைய 2 ஆண்டுகளில் பங்கேற்ற 50 சதவீத போட்டிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

உலக கோப்பையில் (2023) 2வது இடம் பிடித்த இந்தியா, சாம்பியன்ஸ் டிராபியில் (2025) கோப்பை வென்றது. இதனையடுத்து ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் 124 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

'டி-20' உலக கோப்பையில் (2024) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணி, 'டி-20' அணிகளுக்கான தரவரிசையில் 271 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறத்தவறிய இந்தியா, 105 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆஸ்திரேலிய அணி (126 புள்ளி) 'நம்பர்-1' இடத்தில் தொடர்கிறது.

Advertisement