வக்ப் சட்ட வழக்கு: மே 15ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைப்பு

புதுடில்லி: வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, மே 15ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்துள்ளது.
புதிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. இந்த வழக்கு சொத்துரிமை, மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி கொள்கைகள் தொடர்பான சர்ச்சைகளை உள்ளடக்கியது.
இதை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா இன்று வழக்கு விசாரணையின் போது அறிவித்தார்.தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மே 13ம் தேதி ஓய்வு பெறுகிறார்.
இந்த வழக்கு குறித்த விசாரணையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறியிருப்பதாவது:
இந்த வழக்கு மே 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இடைக்கால உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு இந்த விவகாரத்தில் நீண்ட விசாரணை தேவைப்படும் . கடந்த விசாரணையில், வக்ப் சட்டத்தின் இரண்டு முக்கிய அம்சங்களை அமர்வு கவலை தெரிவித்ததை அடுத்து, மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டிற்கு உறுதியளித்தது.
மனுதாரர்களால் சர்ச்சைக்குரிய சில கருத்துக்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதைக் கையாள வேண்டும். அந்த அடிப்படையில் புதிய தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் விசாரிப்பதற்காக வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.



