கிணற்றில் நீச்சல் அடித்தபோதுபுரையேறி 9 வயது சிறுவன் பலி
சென்னிமலை:திருப்பூர் மாவட்டம் முத்துார், முருகம்பாளையம், வெள்ளியங்காட்டு தோட்டத்தை சேர்ந்த தனசேகர் மகன் நிதர்சன், 9; தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முடித்துள்ளார். தனசேகரின் அக்கா வளர்மதி சென்னி மலை அருகே முருங்கத்தொழுவு ஊராட்சி, முதலிகாட்டு தோட்டம் பகுதியில் வசிக்கிறார். இங்கு நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்க, குடும்பத்துடன் முதலிகாட்டுத்தோட்டத்துக்கு தனசேகர் வந்தார்.
அதே பகுதியில் உள்ள கிணற்றில் நீச்சல் அடிக்க, நேற்று முன்தினம் மதியம் நிதர்சன், தந்தை தனசேகர், வளர்மதி மகன் மிதுல், 19; ஆகியோர் சென்றனர். மூவருக்கும் நீச்சல் நன்கு தெரியும். கிணற்றில் குளித்து கொண்டிருந்தபோது நிதர்சனுக்கு திடீரென புரையேறி, மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அதிர்ச்சி அடைந்த தனசேகர், மகனை துாக்கி கொண்டு கிணற்றுக்கு வெளியே வந்தார். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே நிதர்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வருகின்றனர்.
மேலும்
-
'ஏஐ ஏஜன்ட்' தொழில்நுட்பம்; முன்னணி நிறுவனங்கள் ஆர்வம்
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு; குறுவை சாகுபடிக்கு பயன் தராது நல்லசாமி கருத்து
-
தி.மு.க.,வின் முதல் ஆலோசனை
-
சட்ட விரோத கூடாரமாக மாறிய சமுதாயக்கூடம்
-
உயர் நீதிமன்ற உத்தரவால் தப்பிய தேவிகுளம் எம்.எல்.ஏ., தேவிகுளம் எம்.எல்.ஏ.,வுக்கு நிம்மதி
-
'நிட்ஜோன்' கண்காட்சி; 23ம் தேதி துவங்குகிறது