தீவிரவாத தாக்குதலைகண்டித்து ஆர்ப்பாட்டம்
தாராபுரம்:காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை கண்டித்து, தாராபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், பா.ஜ., சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்ட மாவட்ட தலைவர் மோகனப்பிரியா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மூகாம்பிகை பேசினார். காஷ்மீர் பிரச்சினைக்கு
மூல காரணமே காங்கிரஸ்தான் என குற்றம் சாட்டினார். கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் சுகுமார், மாநில இளைஞரணி செயலாளர் யோகேஸ்வரன், ஓ.பி.சி. பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement