புரையேறி 9 வயது சிறுவன் பலி
சென்னிமலை:திருப்பூர் மாவட்டம் முத்துார், முருகம்பாளையம், வெள்ளியங்காட்டு தோட்டத்தை சேர்ந்த தனசேகர் மகன் நிதர்சன், 9; தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முடித்துள்ளார்.
தனசேகரின் அக்கா வளர்மதி சென்னி மலை அருகே முருங்கத்தொழுவு ஊராட்சி, முதலிகாட்டு தோட்டம் பகுதியில் வசிக்கிறார்.
இங்கு நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்க, குடும்பத்துடன் முதலிகாட்டுத்தோட்டத்துக்கு தனசேகர் வந்தார்.
அதே பகுதியில் உள்ள கிணற்றில் நீச்சல் அடிக்க, நேற்று முன்தினம் மதியம் நிதர்சன், தந்தை தனசேகர், வளர்மதி மகன் மிதுல், 19; ஆகியோர் சென்றனர்.
மூவருக்கும் நீச்சல் நன்கு தெரியும். கிணற்றில் குளித்து கொண்டிருந்தபோது நிதர்சனுக்கு
திடீரென புரையேறி, மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த தனசேகர், மகனை துாக்கி கொண்டு கிணற்றுக்கு வெளியே வந்தார்.
பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே நிதர்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வருகின்றனர்.
மேலும்
-
படகுகளை மீட்க ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
-
தங்கம் சவரன் விலை ஒரே நாளில் ரூ.1,160 அதிகரிப்பு
-
நாங்கள் தான் விபத்தை ஏற்படுத்தி விட்டோம் என்று கூறுவது ஏற்புடையதல்ல: மதுரை ஆதீனம்
-
கடிதம் எழுதி வைத்து மாணவன் மாயம்
-
வர்த்தகரிடம் ரூ.26.50 லட்சம் சுருட்டல் ஆசை காட்டி மோசம் செய்த பெண்
-
தொட்டபெட்டா சிகரத்துக்கு வந்த காட்டு யானையால் பரபரப்பு; வெளியேற்றப்பட்ட சுற்றுலா பயணிகள்