குண்டும் குழியுமான சாலைவாகன ஓட்டிகள் அவதி


கரூர்:சுக்காலியூரில், தேத்தம்பட்டி சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.

கரூர் மாவட்டம் அப்பிப்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட சுக்காலியூர் முதல் மதுரை -பைபாஸ் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேத்தம்பட்டி வரையிலான சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இச்சாலையில், ஏற்றுமதி ரக ஜவுளி துணிகளுக்கு சாயமேற்றும் சாயப்பட்டறைகள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், ஆலைகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்
. தினமும் சர்க்கஸ் சாகசம் நடத்தி செல்ல வேண்டி உள்ளது.இந்த சாலையையொட்டி ஏராளமான விவசாய நிலங்களும் உள்ளன. வேளாண் நிலங்களுக்கு உரம் உள்ளிட்ட இடுபொருள்களை, வாகனங்களில் எடுத்து செல்ல முடியாமல் விவசாயிகளும் அவதியுறுகின்றனர்.
பழுதான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement