சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

செங்கல்பட்டு,
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது.
சென்னை, சங்கர் நகர் காவல் நிலையை எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 10 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, 27, என்பவர், 2014 செப்., 19ம் தேதி, சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரையடுத்து, சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏழுமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில், அரசு வழக்கறிஞர் மைதிலி தேவி ஆஜரானார்.
வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், ஏழுமலைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமா பானு, நேற்று தீர்ப்பளித்தார்.
மேலும், இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, 3 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின், ஏழுமலையை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
கொள்முதல் செய்த நெல்லுக்கு ரூ.250 கோடி பாக்கி; விவசாயிகள் தவிப்பு
-
ராணுவ இணையதளங்களை குறிவைத்து பாக்., இணைய திருடர்கள் தாக்குதல்
-
தொண்டர் தலையில் துப்பாக்கி; விஜய் பாதுகாவலரால் திகில்
-
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தமிழகத்தில் பதுங்கலா: பா.ஜ.,
-
இலங்கை - இந்திய மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு அவசியம்: பவன் கல்யாண்
-
அமெரிக்க பயணத்தில் அரசியல் பேச்சு அடியோடு தவிர்த்தார் அண்ணாமலை