மின்னல் தாக்கிய முதியவர் சிகிச்சை பலனின்றி பலி

செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த மேலமையூர், காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி, 63.

இவர், வீட்டின் அருகில் கொட்டகை அமைத்து, மாடுகள் வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்த போது, வீட்டின் வெளியே கட்டப்பட்டு இருந்த மாடுகளை கொட்டகையில் கட்ட சென்றார்.

அப்போது, மின்னல் தாக்கி மயங்கி கீழே விழுந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பொன்னுசாமி நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement