திடீர் மழையால் மின்கம்பங்கள் சேதம் புறநகரில் பல மணி நேரம் மின் தடை 

சென்னை, சென்னை புறநகர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், மின் கம்பத்தின்மேல் செல்லும் கம்பி வாயிலாக, டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட சாதனங்கள் உதவியுடன் மின் வினியோகம் செய்யப்படுகிறது.

மேற்கண்ட இடங்களில் நேற்று முன்தினம் மாலை, சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. திடீரென பலத்த காற்று வீசியதால், பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து, மின் கம்பம் மேல் செல்லும் கம்பி மீது விழுந்தன.

இதனால் கம்பங்களும் சாய்ந்ததால், மின் தடை ஏற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், மின் தடை நீக்க பிரிவில், குறைந்த ஊழியர்களை பணியில் இருந்தனர்.

பல இடங்களில் மின் சாதனங்கள் சேதடைமந்ததால், அவற்றை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

பின், விடுப்பில் இருந்த களப்பிரிவு ஊழியர்கள் அவரச அழைப்பின் பேரில் வரவழைக்கப்பட்டு, மின் சாதனங்கள் சீரமைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.

இதனால், தாம்பரம், வண்டலுார் உட்பட சென்னை புறநகர் பகுதிகளில், நேற்று அதிகாலை தான் மின் வினியோகம் முழுதுமாக சீரானது.

***

Advertisement