சட்ட விரோத கூடாரமாக மாறிய சமுதாயக்கூடம்

பொங்கலுார் : பொங்கலுார் ஒன்றியம், தேவனம்பாளையத்தில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு உள்ளது. பொங்கலுார் - -பொல்லிக் காளிபாளையம் ரோட்டோரத்தில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் எப்பொழுதாவது தான் திருமண விசேஷம் நடக்கும்.

அதனை அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகளே பயன்படுத்தி வருகின்றனர். சமுதாயக்கூடத்தின் முன் பகுதி ஓலை தடுப்பால் மறைக்கப்பட்டுள்ளது.

இது குடிமகன்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் சாதகமாக அமைந்துள்ளது. தற்போது, குப்பைகளும், காலி மது பாட்டில்களும் நிறைந்து அந்த இடம் குப்பை மேடாக மாறி வருகிறது. இதனை அதிகாரிகள் யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இது போன்ற இடங்கள்தான் சமூக விரோதிகளுக்கு புகலிடமாக மாறி விட்டது.

எனவே, இது விஷயத்தில், ஊருக்கு ஒதுக்கப்புறமாக உள்ள அனைத்து கட்டடங்களையும் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

Advertisement