அரசு மியூசியத்தில் சமத்துவம் காண்போம் கண்காட்சி

மதுரை: மதுரை அரசு மியூசியத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் 'சமத்துவம் காண்போம்' எனும் தலைப்பில் சமத்துவ புகைப்படக் கண்காட்சி, விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோருக்கு பாதிப்புகள், போராட்டங்கள் குறித்த நிகழ்வுகள், பழங்குடியினர் வாழ்க்கை, திருமண முறை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புகைப்பட கலைஞர் தர்மதுரை, 18ம் நுாற்றண்டு முதல் நடந்த நில உரிமை போராட்டம் உள்ளிட்டவை குறித்து செயற்கை தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.

மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் பாலசுப்பிரமணியன் நாளிதழ்களில் வெளிவந்த பழங்குடியினர், தலித் செய்திகளை காட்சிப்படுத்தியுள்ளார்.

இதையொட்டி நடந்த சமத்துவ நடை பயணத்தில் மாணவர்கள் பங்கேற்றனர். இன்றும் கண்காட்சியை காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை பார்வையிடலாம். நிறைவு விழா கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் நடக்கிறது.

Advertisement