பர்கூர் தாசில்தார் அலுவலகத்தில்திறக்கப்படாத காத்திருப்போர் அறை

பர்கூர்:கிருஷ்ணகிரி தாலுகாவை இரண்டாக பிரித்து பர்கூர் தாலுகா, 2015ல், புதியதாக உருவாக்கப்பட்டது. தற்காலிக கட்டடத்தில் தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில், பர்கூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில், 3 ஆண்டுகளுக்கு முன் புதிதாக கட்டப்பட்ட தாசில்தார் அலுவலகம் செயல்பாட்டிற்கு வந்தது.

இங்கு, 31 வருவாய் கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு பணி நிமித்தமாக தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள். பிறப்பு, இறப்பு சான்றிதழ், உதவித் தொகை, ரேஷன் கார்டு, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை என பல்வேறு காரணங்களுக்காக இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள், அலுவலர்களை சந்திக்க காலதாமதம் ஏற்படும் போது, அவர்கள் அமருவதற்காக அங்கு காத்திருப்போர் அறை கடந்த ஆண்டு கட்டப்பட்டது.
காத்திருப்போர் அறை கட்டி முடிக்கப்பட்டும் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் தாசில்தார் அலுவலகத்திற்கு வரக்
கூடிய மக்கள் ஆங்காங்கே மரத்தடியில் அமர்ந்தும், அந்த பகுதியில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே காத்திருப்போர் அறையை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement