சேனு மாரியம்மன் கோவில்திருவிழா கோலாகலம்




பர்கூர்:பர்கூர் அடுத்த பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளி கிராமத்தில் சேனு மாரியம்மன் கோவில் திருவிழா விமர்சையாக நடந்தது. மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.


திருமண தோஷங்கள் நீங்கவும், புத்திர பாக்கியம், கல்வி செல்வம், ஆயுள் ஆரோக்கியம், வீட்டில் லட்சுமி கடாட்சம் ஆகிய நன்மைகள் பெறவும் வேண்டி, 1,008 பெண்கள் கலந்து கொண்ட குத்து விளக்கு பூஜை நடந்தது. சேனு மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Advertisement