மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கல்

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டியை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.

புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில், மண்ணாடிப்பட்டு தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 6 பேருக்கு, இலவச இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டி வழங்கும் விழா திருக்கனுாரில் நடந்தது.

விழாவில், அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, மாற்றத்திறனாளி பயனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டி மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், பா.ஜ., பிரமுகர் முத்தழகன், வர்த்தக அணி மாநில தலைவர் கலியபெருமாள், தமிழ்மணி, கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் திட்டப்பணிகளை காட்டேரிக்குப்பத்தில் அமைச்சர் நமச் சிவாயம் துவக்கி வைத்தார்.

Advertisement