கம்பியால் கால்களை கட்டி மூதாட்டி உடல் கிணற்றில் வீச்சு

ஜோலார்பேட்டை:மூதாட்டியை கொலை செய்து, இரும்பு கம்பியால் கால்களை கட்டி, உடலை கிணற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கூத்தாண்ட குப்பம் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்துக்கு சொந்தமான கிணற்றில், மூதாட்டி சடலம் கிடப்பதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

போலீசார் மற்றும் திருப்பத்துார் தீயணைப்பு துறையினர், சடலத்தை மீட்டனர்.

மூதாட்டியின் கால்கள் கம்பியால் கட்டப்பட்டிருந்தன. விசாரணையில், அவர், அப்பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி நாகம்மாள், 65, என்பதும், தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது.

நாகம்மாளை யாரோ கொலை செய்து, கால்களை கட்டி, உடலை கிணற்றில் வீசி இருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.

நகைக்காக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில், ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement