இன்று இனிதாக திருப்பூர்

n ஆன்மிகம் n

சித்திரை தேர்த்திருவிழா

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. பஞ்சமூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளல் - காலை, 6:00 மணி. கலை நிகழ்ச்சி: திருமுறை இன்னிசை - மாலை, 6:00 மணி முதல்.

l விக்ரமசோழீஸ்வரசுவாமி கோவில் மற்றும் மாரியம்மன் கோவில், கண்ணபுரம், காங்கயம். விநாயகர் வழிபாடு புண்யாகம் பஞ்சகவயம் - காலை, 9:00 முதல், 10:00 மணிக்குள், மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம் ரக் ஷாபந்தனம் அதிவாசயாகம் - மாலை, 6:30 மணி.

l உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமா நல்லுார். சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜை, மண்டபகட்டளை - இரவு, 8:00 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீபட்டத்தரசி அம்மன் கோவில், சிறு பூலுவப்பட்டி, வேலம்பாளையம், திருப்பூர். மாவிளக்கு எடுத்து, வாணவேடிக்கை - அதிகாலை, 4:00 மணி. விநாயகர் பொங்கல் - காலை, 7:00 மணி. பட்டத்தரசி அம்மன் பொங்கல் - காலை, 10:00 மணி. அலங்கார பூஜை - மதியம், 12:00 மணி. சுவாமிதிருவீதியுலா - மாலை, 4:00 மணி.

l ஸ்ரீமாகாளியம்மன் கோவில், காவிலிபாளையம் புதுார், திருப்பூர். மாவிளக்கு எடுத்து ஊர்வலம் - மாலை, 5:00 மணி.

l ஸ்ரீ மங்களகணபதி, ஸ்ரீ கல்யாணசுப்ரமணியம், ஸ்ரீ பூமிதேவி, நீலாதேவி சமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள், ஆனுார் ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில், வேலம்பாளையம்.கொடியேற்றம் - காலை, 6:00 முதல், 7:00 மணி வரை.

l முத்துமாரியம்மன், நாட்ராயன், நாச்சிமுத்து, கருப்பராயன் மற்றும் கன்னிமார் சுவாமி கோவில், பாரதி நகர், வீரபாண்டி. மாவிளக்கு எடுக்கும் வைபவம் - காலை, 6:00 மணி, பொங்கல் வைத்தல் வைபவம் - காலை, 9:00 மணி.

l ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், குமரானந்தபுரம், திருப்பூர். மாவிளக்கு எடுத்து வருதல் - காலை, 6:00 மணி, பொங்கல், உச்சிகால பூஜை - மதியம், 12:00 மணி, வேல் கொண்டு வருதல் - மாலை, 4:00 மணி.

l காமாட்சி அம்மன் கோவில், மத்திய பஸ் ஸ்டாண்ட் பின், திருப்பூர். விநாயகர் பொங்கல் - காலை, 8:00 மணி, படைக்கலம் எடுத்து வருதல் - இரவு,8:00 மணி.

l மதுரை வீரன், கருப்பராயன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், ராயபுரம், திருப்பூர். அலகு குத்துதல் - இளநீர் காவடி - காலை, 6:00 முதல், 8:00 மணி வரை. பொங்கல் வைத்தல் - மதியம், 12:00 மணி, மாவிளக்கு பூஜை, மதுரை வீரன் ஆட்டம் - மாலை,6:00 மணி.

l ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், ராயபுரம், திருப்பூர். பொங்கல் வைத்தல், அம்மை அழைத்தல், மாவிளக்கு - காலை, 9:00 மணி.

l மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம், திருப்பூர். சிறப்பு அலகு குத்துதல், பூவோடு - மாலை,6:00 மணி.

l ஸ்ரீ பெரிய விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ துர்க்கையம்மன் ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தேவசேன சமேத ஸ்ரீ கல்யாண சுப்ரமணியர், ஸ்ரீ காலபைரவர் கோவில், ப.வடுகபாளையம், பல்லடம். மாவிளக்கு எடுத்தல் - காலை, 6:15 மணி, திருக்கல்யாண உற்சவம் - காலை, 9:35, பொங்கல் வைத்தல் - காலை, 10:30 மணி, சிறப்பு அலங்கார பூஜை - மதியம், 12:00 மணி, பூவோடு எடுத்தல் - மாலை,3:00 மணி.

l மாரியம்மன் கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம், திருப்பூர். சிறப்பு பூஜை - காலை, 9:00 மணி.

பகவத் கீதை தொடர்

சொற்பொழிவு

பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.

மண்டல பூஜை

காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். மண்டல பூஜை - காலை, 10:00 மணி.

n பொது n

விழிப்புணர்வு

கருத்தரங்கம்

வருமான வரி குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம், ஏற்றுமதியாளர் சங்க அலுவலகம், அப்பாச்சி நகர், திருப்பூர். மாலை, 5:00 மணி.

இ.கம்யூ., மாநில குழு

கூட்டம்

இ.கம்யூ., கட்சியின் மாநில குழு கூட்டம், எம்.கே.எம்., ரிச் ஓட்டல், ராயபுரம், திருப்பூர். பங்கேற்பு: தேசிய செயலாளர் நாராயணா, மாநில செயலாளர் முத்தரசன். காலை, 10:00 மணி

மனவளக்கலை யோகா

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி வரை, மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.

l விழிப்புணர்வு கருத்தரங்கம், மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, சொர்ணபுரி அவென்யு, 15 வேலம்பாளையம். காலை, 5:30 முதல், 7:30 மணி வரை, மாலை, 6:00 முதல், 8:00 மணி வரை.

மாட்டுச்சந்தை

கண்ணபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு மாட்டுச்சந்தை, ஓலப்பாளையம். காங்கயம். காலை, 8:00 மணி முதல்.

Advertisement