காங்கேயத்தில் கிராம சாலைகளில்போலீசார் தீவிர வாகன சோதனை

காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்கள், புறநகர் பகுதியில் தனியாக உள்ள தோட்டத்து வீடுகள், தனியாக குடியிருக்கும் வயதானவர்கள் தங்கி இருக்கும் வீடுகளில் 'சிசிடிவி' கேமரா மற்றும் சைரன்களை பொருத்த வேண்டும் எனவும், வீடுகள் தோறும் நாய்களை வளர்க்க வேண்டும், இரவு நேரங்களில் நாய்கள் சத்தமோ அல்லது கதவை தட்டினாலும் திறக்கக் கூடாது.


இத்தகவல்களை பக்கத்தில் உள்ளவர்களுக்கும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும் தெரிவிக்க வேண்டும் என, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.காங்கேயம் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில், திருப்பூர், சென்னிமலை மற்றும் முத்துார் சாலைகளின் குறுக்கே செல்லும் பிஏபி கால்வாயை ஒட்டிய பாதை, திட்டுப்பாறை அருகே எல்பிபி கால்வாய் அருகே உள்ள பாதை, மேலும் நொய்யல் ஆற்றங்கரை ஓரமாக உள்ள வழித்தடங்கள், கிராம சாலைகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சந்தேகத்திற்கு உரிய நபர்களின் கைரேகை முதல், அடையாள அட்டைகள் வரை அனைத்தும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

Advertisement