காத்திருப்பு போராட்டம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளர்கள் மார்ச் 29 அன்று மதுரை மாவட்டம் பாறைப்பட்டி அருகே நெல் நடவு செய்வதற்கு சென்று விட்டு திரும்பும் போது கார் மோதியதில் ராமர், தங்கம்மாள், அருஞ்சுனை ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இதில் உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டோர் நேற்று காலை வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாசில்தார் சரஸ்வதியிடம் மனு அளித்தனர்.

Advertisement