வள்ளலார் மன்றத்தில் சித்திரை பூச விழா

சங்கராபுரம் : சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில், சித்திரை மாத பூச விழா நடந்தது. மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார்.

வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர்கள் அருணாச்சலம், முர்த்தி, நெடுஞ்செழியன், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சந்திரசேகர் வரவேற்றார். முன்னதாக தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ஓய்வு பெற்ற ஆசிரியர் இளையாப்பிள்ளை முன்னிலையில் அகவல் படித்து பிரார்த்தனை செய்யப்பட்டது. சமீபத்தில் பஹல்காம் தாக்குதலில் உயிர் நீத்த, 26 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

விழாவில் அரிமா மாவட்ட தலைவர் வேலு, பொது சேவை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குசேலன், விஜயகுமார், சரவணதேவி, சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜோதி தரிசனத்தை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. இளங்கோ நன்றி கூறினார்.

Advertisement