ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.,வினர் மீது வழக்கு




ஓசூர்:காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி பொதுமக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி கொலை செய்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கண்டித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., கட்சி சார்பில், ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே நேற்று முன்தினம் காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


இதற்கு, போலீசார் உரிய அனுமதி வழங்காத நிலையில், வி.ஏ.ஓ., வெங்கடேசமூர்த்தி ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன், முன்னாள் எம்.பி., நரசிம்மன், முன்னாள் மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் விஷ்ணுகுமார், கிரண்குமார் மற்றும் 10 பெண்கள் உட்பட மொத்தம், 225 பேர் மீது, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement