குடிநீர் கேட்டு சாலை மறியல்

ஊத்துக்குளி : ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட, 14வது வார்டு பகுதியில் கடந்த, பத்து நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இந்நிலையில், முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, ஊத்துக்குளி ஆர்.எஸ்., - காங்கயம் ரோட்டில் மேம்பாலம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற ஊத்துக்குளி போலீசார், பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் பேச்சு நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால், அனைவரும் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement