பேட்டரி வண்டிக்கு சார்ஜ் போட்டபோது தீ பிடிப்பு


பள்ளிப்பாளையம்:

பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த ஆனங்கூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்; இவர், கடந்த, 2021ல் பேட்டரி டூவீலர் வாங்கி பயன்படுத்தி வந்தார். கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திருச்செங்கோட்டில் இருந்த டீலர் கடையை மூடி விட்டார்.


இதனால், டூவீலரை சர்வீஸ் செய்ய ஒவ்வொரு முறையும் நாமக்கல் சென்று, சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, டூவீலருக்கு சார்ஜ் போட்டுள்ளார். சிறிது நேரத்தில் பேட்டரி வெடித்து டூவீலர் முற்றிலும் எரிந்து சேதமானது. இதனால் வெப்படையில் பரபரப்பு
ஏற்பட்டது.

Advertisement