அம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்
ஆத்துார்,:ஆத்துார், தாயுமானவர் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நேற்று நடந்தது. அப்போது கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி ஆகிய புண்ய நதிகளில் இருந்து எடுத்து வந்த தீர்த்தங்களை, 1,500க்கும் மேற்பட்ட குடங்களில் ஏராளமான பக்தர்கள் சுமந்து, முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து தீர்த்தக்குடங்களின் புனித நீரை, மூலவர் அம்மன் மீது ஊற்றி அபி ேஷகம் செய்து வழிபட்டனர்.திருமண தடை நீங்குதல், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி ஏராளமானோர் வழிபட்டனர். அப்போது மூலவர் அம்மன், கோமதி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். தீர்த்தக்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கு, மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, தி.மு.க., மாவட்ட பொருளாளரான, திருப்பணிக்குழு தலைவருர் ஸ்ரீராம், ஆத்துார் துளுவ வேளாளர் மகாஜன மன்ற தலைவர் கண்ணன் உள்ளிட்ட விழா குழுவினர், அன்னதானம் வழங்கினர்.