முல்லைப் பெரியாறு அணையில் தமிழக பொறியாளர் குழு ஆய்வு

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் தமிழக பொறியாளர் குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது.
முல்லைப் பெரியாறு அணையில் கடந்த ஓராண்டிற்கு மேலாக செயற்பொறியாளர் பணியிடம் காலியாக மே 3ல் செயற்பொறியாளராக செல்வம் பொறுப்பேற்றார்.
அவர் தலைமையில் பொறியாளர்கள் நேற்று அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அணை நீர்மட்டம், நில அதிர்வை கண்டறியும் சீஸ்மோகிராப் கருவி, மழைமானி, வெப்பமானி, காற்றின் வேகம் கண்டறியும் கருவிஆகியவற்றின் இயக்கங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மெயின் அணை, பேபி அணை, கேலரி பகுதி, ஷட்டர், மண் அணை ஆகியவற்றை பார்வையிட்டனர். ஷட்டர்கள் இயக்கிப் பார்க்கப்பட்டது. உதவி பொறியாளர்கள் மகேந்திரன், ராஜகோபால், முகமது உவைஸ், பாலசேகரன், பார்த்திபன் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குழந்தைகள் பாதுகாப்பு : கலெக்டர் உத்தரவு
-
கர்நாடகாவில் 3 இடங்களில் போர்க்கால ஒத்திகை இன்று! போர் துவங்கினால் தப்புவது குறித்து பயிற்சி
-
பயங்கரவாதிகளுக்கு அதிகாரம் நளின்குமார் கட்டீல் காட்டம்
-
மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
-
மக்களுடன் முதல்வர் முகாம்: கலெக்டர் ஆலோசனை
-
சென்னப்பட்டணாவுக்கு கூடுதல் நிதி: சிவகுமார்
Advertisement
Advertisement