பயங்கரவாதிகளுக்கு அதிகாரம் நளின்குமார் கட்டீல் காட்டம்

உடுப்பி : ''சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, கர்நாடகாவில் பயங்கரவாதிகளுக்கு அதிகாரம் அளித்து வருகிறது,'' என, பா.ஜ., முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல் குற்றஞ்சாட்டினார்.
உடுப்பியில் அவர் அளித்த பேட்டி:
சித்தராமையாவின் ஆட்சிக் காலத்தில், ஹிந்துக்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகின்றனர். நீங்கள், பாகிஸ்தான் கொடியை ஏந்தினால், ஜிந்தாபாத் என்று கூறி உங்களிடம் பணம் வசூலிக்கப்படாது.
சமூக வலைதளம் மூலம் ஹிந்து பிரமுகர்கள் கொல்லப்படுவர் என்று மிரட்டல்கள் தொடர்ந்து வருகின்றன.
காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதத்துக்கும், மங்களூரில் நடக்கும் பயங்கரவாதத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
சுகாஸ் ஷெட்டி கொலைக்கு பின், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், உள்ளூர் எம்.எல்.ஏ.,க்களை அழைக்காமல், முஸ்லிம் தலைவர்களை சந்தித்துப் பேசி உள்ளார்.
சமூக ஊடகங்களில் ஹிந்துக்களுக்கு ஆதரவாக பதிவிட்டதற்காக பலரை கைது செய்யும் அரசு, ஒரு கூட்டத்தில் உள்துறை அமைச்சரை மிரட்டியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? மாநில அரசு உயிருடன் உள்ளதா, இறந்துவிட்டதா என்று தெரியவில்லை.
சுகாஸ் வீட்டுக்கு காங்கிரஸ் தலைவர்கள் யாரும் செல்லவில்லை.
காங்கிரசில் உள்ள முஸ்லிம் தலைவர் ஒருவர், ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துவிடுவோம் என்று அக்கட்சி தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹிந்த மதத்தை ஆதரிக்கும் அனைவரும் தாக்கப்படுகின்றனர். சித்தராமையாவை சிவகுமார் மிரட்டினால், அவர் கைது செய்யப்படுவார். ஆனால், அமைச்சரை மிரட்டியவர்களை கைது செய்ய தைரியம் இல்லை.
இரண்டு ஹிந்து பிரமுகர்களுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதால், அவர்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும்.
சுகாஸ் ஷெட்டி மீது நான்கைந்து வழக்குகள் இருப்பதால், அவர் வீட்டுக்கு செல்லவில்லை என்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகிறார்.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட பல அரசியல் தலைவர்கள் மீதும் வழக்குகள் உள்ளன. அவர்களும் ரவுடிகளா?
சுகாஸ் மீது இரண்டு ஆண்டுகளாக எந்த புகாரும் பதிவாகவில்லை. எந்த சம்பவத்திலும் அவர் ஈடுபடவில்லை.
ஒருவரை ரவுடி என்று முடிவு செய்வது உள்துறை அமைச்சர் அல்ல, நீதிமன்றம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.