இந்திய ராணுவ தாக்குதலுக்கு மத்திய அமைச்சர்கள், முதல்வர் யோகி ஆதியநாத் வாழ்த்து

5

புதுடில்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இன்று(மே 07) நள்ளிரவில் துவங்கியது.

இதற்கு மத்திய உள்துறை அமைச்சர்கள் அமித்ஷா, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங், கிரன் ரிஜ்ஜு, பியுஷ் கோயல், உ.பி.,, முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆகியோர் இந்திய ராணுவத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


‛பாரத் மாதா கி ஜெய்‛, ‛ஜெய் ஹிந்த்' முழக்கங்களை மத்திய அமைச்சர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பியுள்ளனர்.

Advertisement