பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது: பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்

4

லண்டன்:பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது என்று பிரி்ட்டனின் முன்னாள் பிரதமரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் கூறியுள்ளார்.

ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், இந்திய நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரிஷி சுனக் கூறியதாவது:

வேறொரு நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்திலிருந்து தனக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதை எந்த நாடும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. பயங்கரவாத உள்கட்டமைப்பை இந்தியா தாக்குவதில் நியாயம் உள்ளது. பயங்கரவாதிகளுக்கு இதை விட எந்தத் தண்டனையும் இருக்க முடியாது. இவ்வாறு ரிஷி சுனக் கூறியுள்ளார்.


பிரிட்டன் பார்லிமென்டில் அந்நாட்டு பிரதமர் ஸ்டார்மர், பேசும்போது, நாங்கள் இரு நாடுகளுடனும், மற்ற சர்வதேச கூட்டாளி நாடுகளுடன் பதற்றத்தைக் குறைத்தல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அவசர ஆலோசனை, பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று கூறினார்.

இந்நிலையில் ரிஷி சுனக் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Advertisement