'குடி'மகன்களின் கூடாரமாகும் நகர் நல மையங்கள்

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில், பல லட்சக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள நகர் நல மையங்கள் திறக்கப்படாமல் உள்ளது. இவற்றை 'குடி'மகன்கள் மது அருந்த பயன்படுத்துவது, விஷமிகள் சேதப்படுத்துவது போன்றவை தொடர்கதையாக உள்ளது.
திருப்பூர் மாநகராட்சியின் கீழ் மாநகராட்சி பகுதிகளில், 17 துணை ஆரம்ப சுகாதார மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றுடன் தற்போது புதிதாக, 7 மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.
இதுவிர, தலா, 30 லட்சம் ரூபாய் மதிப்பில், 11 பகுதிகளில் நகர் நல மையங்கள் கட்ட திட்டமிட்டு பணிகள் துவங்கின. வார்டுதோறும் குறைந்த பட்சம் ஒரு நல மையம் என்ற அடிப்படையில், புதிய மையங்கள் அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கடந்தாண்டு புதியதாக, 10 மையங்கள் கட்ட திட்டமிட்டு பணிகள் துவங்கி நிறைவு பெற்றுள்ளன. அவற்றின் கட்டுமானப் பணி நிறைவடைந்தும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் சில மையங்களில் 'குடி'மகன்கள் தங்களது மதுக்கூடமாக மாற்றி விட்டனர். பல இடங்களில் சுற்றிலும் புதர்கள் மண்டி காட்சியளிக்கிறது.
கேட்பாரற்ற நிலையில் உள்ள மையங்களின் கண்ணாடி ஜன்னல்கள் விஷமிகளால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. கட்டி முடித்தும் இவை திறக்கப்படாமல் வீணாவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாநகர நல அலுவலர் முருகானந்த் கூறியதாவது:
மாநகராட்சி பகுதியில், 10 நல மையங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பணியாற்ற தலா ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் ஒரு உதவியாளர் என மொத்தம் 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது பயிற்சி முடித்து உரிய பகுதி ஆரம்ப சுகாதார மையங்களில் தற்போது பணியில் உள்ளனர்.
புதிய கட்டடங்கள் இம்மாதத்தில் திறக்கப்படவுள்ளது. மையங்கள் திறப்பு விழா முடிந்த பின் அனைத்து மையங்களிலும் அவர்கள் தங்கள் பணியைத் துவங்குவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
தாக்குதல் நடத்தியது ஏன்: ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளிடம் இந்தியா விளக்கம்
-
பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது: பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்
-
தேச விரோத பிரசாரங்கள் மீது நடவடிக்கை: அமித்ஷா அறிவுறுத்தல்
-
பஹல்காம் தாக்குதல் சம்பவம்; சுற்றுலா பயணிகளுக்கு என்.ஐ.ஏ., வேண்டுகோள்!
-
பும்ரா, ஜடேஜா 'நம்பர்-1': ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்
-
நெஹ்ரா, பாண்ட்யாவுக்கு அபராதம்