பாரதிதாசன் பிறந்தநாள் விழா

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த தேவ பாண்டலத்தில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா நடந்தது. அரிமா மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார். திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி, ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், ஓய்வு பெற்ற மின் வாரிய பொறியாளர் செல்வமணி முன்னிலை வகித்தனர்.

தமிழ் படைப்பாளர் சங்க துணை செயலாளர் சக்திவேல் வரவேற்றார்.

தொழிலதிபர் கதிரவன் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் தமிழ்ச்செம்மல் விருதுபெற்ற சண்முகம் பிச்சப்பிள்ளை கவுரவிக்கப்பட்டார். நிறைவாக, கார்குழலி தமிழ் சங்க தலைவர் தாமோதரன் நன்றி கூறினார்.

Advertisement