நிபந்தனையற்ற ஓய்வூதியம் கோயில் பூஜாரிகள் வலியுறுத்தல்

ராமநாதபுரம்:கோயில் பூஜாரிகளுக்கு நிபந்தனையற்ற ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என ஹிந்து கோயில் பூஜாரிகள் பேரவை வலியுறுத்தி உள்ளது.

ராமநாதபுரத்தில் ஹிந்து கோயில் பூஜாரிகள் பேரவை மாநில துணைத் தலைவர் கோதாவரி கூறியதாவது: கிராம பூஜாரிகள் நலவாரியத்தில் பதிவு செய்தும் இன்னும் பலருக்கு அடையாள அட்டை கிடைக்கவில்லை. உடனடியாக வழங்க ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊக்கத்தொகையும் வழங்க வில்லை.

பூஜாரிகளுக்கு நிலம் இருக்க கூடாது. ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரம் ஆகிய கட்டுப்பாடுகளால் பலர் ஓய்வூதியம் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். வயதான காலத்தில் சிரமப்படும் பூஜாரிகளுக்கு நிபந்தனையின்றி ஓய்வூதியம்வழங்க வேண்டும்.

மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.4000த்தில் இருந்து ரூ.5000 ஆக அதிகரிக்க வேண்டும். ஏழ்மை நிலையில் உள்ள பூஜாரிகளுக்கு கோசாலையில் உள்ள பசுமாடுகளை இலவசமாக வழங்க வேண்டும். கோயில்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும். மார்கழி மாத பூஜைக்கு ரேஷனில் இலவசமாக அரிசி தர வேண்டும்.

பூஜாரிகளுக்கு இறப்பு, திருமணம் போன்ற உதவித்தொகையும் கிடைப்பது இல்லை. நலவாரிய சலுகைகளை வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராமநாதபுரத்தில் மே 17 ல் போராட்டம் நடைபெற உள்ளது என்றார்.

பூஜாரிகளுக்கு இறப்பு, திருமணம் உதவித்தொகை கிடைப்பது இல்லை. நலவாரிய சலுகைகளை வழங்க வேண்டும்.

Advertisement