மின்தடையால் அவதி படந்தாலில் சாலை மறியல்

சாத்துார்: சாத்துார் படந்தால் ஊராட்சிக்குட்பட்ட மருதுபாண்டியர் நகரில் நேற்று முன்தினம் மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை சூறாவளி, இடி மின்னலுடன் பெய்த மழையில் மருதுபாண்டியர் நகர் முனியசாமி கோயில் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது வேப்ப மரம் முறிந்து விழுந்தது.

இதனால் அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்தடை ஏற்பட்டது.நேற்று மாலை 6:30 மணி வரை மின்தடை சரி செய்யப்படவில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் சாத்துார் தாயில்பட்டி சாலையில் சாலை மறியல் செய்தனர்.

போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து அவர்கள்கலைந்து சென்றனர்.பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சரி செய்யும் பணியில் மின்சார வாரியத் துறையினர் ஈடுபட்டனர்.இரவு 8:00 மணி வரை அப்பகுதியில் மின்சாரம் வராததால் மக்கள் அவதிப்பட்டனர்.

Advertisement