சூதாடிய மூவர் கைது

விழுப்புரம்: பணம் வைத்து சூதாடிய மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர்.

காணை போலீசார், கோனுார் ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு விழுப்புரம் கே.கே., ரோடு இந்திரா நகர் சுதாகர், 34; சு.பில்ராம்பட்டு பரசுராமன், 45; காணை இந்திரா நகர் அருட்செல்வம், 32; ஆகியோர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.

காணை பேலீசார் வழக்குப் பதிந்து, சுதாகர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்து 40,000 ரூபாயை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement