பொது குட்டையில் மூழ்கிய மாணவரின் உடல் மீட்பு
திருப்போரூர், ஆந்திராவைச் சேர்ந்தவர் குரு சத்யசாய், 18. இவர், காட்டாங்கொளத்துாரில் உள்ள தனியார் பல்கலை விடுதியில் தங்கி, முதலாம் ஆண்டு பி.டெக்., படித்து வந்தார். கடந்த 4ம் தேதி, கூடுவாஞ்சேரி அருகே உள்ள கீரப்பாக்கம் கல்குவாரி குட்டையில் குளிக்க, சக நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அங்கு குளித்தபோது, ஆழமான பகுதிக்குச் சென்ற குரு சத்யசாய், நீரில் மூழ்கினார். தகவலறிந்து சென்ற மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மெரினா கடற்கரை நீச்சல் வீரர்கள், மாணவரை மீட்க கோரினர். இந்நிலையில், மாணவர் மூழ்கி மூன்றாவது நாளான நேற்று முன்தினம் மாலை, இறந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. உடலை பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement