கஞ்சா விற்பனை இருவர் கைது

காரைக்கால்: காரைக்காலில் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் நெடுங்காடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் சப் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது நெடுங்காடு தொண்டைமங்கலம் பகுதியில் உள்ள அய்யாசாமி என்பவர் வீட்டில் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

பின்னர் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பிரசன்னா ,19; உள்ளிட்ட இருவர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது அவரிடம் 6 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். நெடுங்காடு போலீசார் இருவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

Advertisement