விபத்தில் தந்தை, மகள் காயம்

விருதுநகர்: முண்டலாபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணப் பெருமாள் 50. மே 4ல் தனது 17 வயது மகள் நீட் தேர்வு எழுதுவதற்காக விருதுநகர் வி.வி.வி., கல்லுாரிக்கு மகளுடன் டூவீலரில் சென்றார்.

ஒ.நடுவபட்டி -- தாதம்பட்டி ரோட்டில் வாழைத்தோட்டம் அருகே சென்றபோது சூலக்கரை மணிகண்டன் ஓட்டிய சரக்கு வாகனம் மோதி இருவரும் படுகாயமடைந்தனர்.மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement