களைகட்டிய கோயில் விழா ஆடு விற்பனை அமோகம்

திருவாடானை: திருவாடானை பகுதியில் கோயில் விழாக்கள் நடப்பதால் சந்தையில் ஆடு விற்பனை அமோகமாக உள்ளது.திருவாடானை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் திருவிழாக்கள் களை கட்டியுள்ளது. சில கோயில்களில் ஆடு வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது பாரம்பரியமான வழிபாட்டு முறையாகும். கிராம மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற்றுவதற்காகவோ அல்லது நல்ல காரியங்கள் நடந்ததற்காகவோ ஆடு வெட்டி பலி செலுத்துவர்.

மேலும் பல கோயில்களில் ஆடுகள் வெட்டி பலியிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதும் வழக்கம். தற்போது திருவிழா காலம் என்பதால் திருவாடானை வாரச்சந்தையில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்தது. வியாபாரிகள் கூறியதாவது:

கோயில் திருவிழாக்கள் நடந்து வருவதால் சில வாரங்களாக ஆடுகள் அமோகமாக நடந்துள்ளது. கடந்த மூன்று வாரங்களாக ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது என்றனர்.

Advertisement