சித்திரை பெருவிழா தேரோட்டம்

கூவம்:கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த கூவம் கிராமத்தில் அமைந்துள்ளது அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில்.
இங்கு கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் இந்தாண்டு சித்தரை திருவிழா துவங்கியது.
பின் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் சோமாஸ்கந்தர் திருவீதி உலா நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 9:00 மணிக்கு துவங்கியது.
முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மதியம் 1:00 மணிக்கு கோவிலை வந்தடைந்தது.
இன்று இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.
வரும் 14ம் தேதி பஞ்சமூர்த்தி அபிஷேகம் மற்றும் பஞ்சமூர்த்தி ரிஷப வாகன சேவையுடன் சித்திரை பெருவிழா நிறைவு பெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊராட்சிகளில் குடிநீர், அடிப்படை வசதிகளை பொது உபரித்தொகையில் மேற்கொள்ள உத்தரவு
-
வெம்பக்கோட்டை அணை, வைப்பாற்றில் சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
-
எதிர்கோட்டை காயல்குடி ஆற்றில் தடுப்பணை சேதம்
-
அரசு கலை கல்லுாரியில் சேர மே 27 வரை விண்ணப்பிக்கலாம்
-
குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனத்தை இயக்கிய பெண் துாய்மை பணியாளர்கள்
-
கூடைப்பந்து அணிக்கு மே 14ல் வீரர்கள் தேர்வு
Advertisement
Advertisement