கோடை மழையால் நெசவு தொழில் பாதிப்பு

ஆர்.கே.பேட்டை:அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ள நிலையில், வெயிலின் உக்கிரம், மழையின் பதில் தாக்கம் என, மாறுபட்ட சூழல் ஆர்.கே.பேட்டையில் நிலவி வருகிறது.

இரண்டு நாட்களாக ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் காலை முதல், மதியம் வரை கடும் வெயிலும், அதன் பின் மேகமூட்டமும், சூறாவளியுடன் கனமழையும் பெய்து வருகிறது.

இதனால் அக்னிநட்சத்திர வெயிலின் தாக்கம் குறைந்து வருகிறது.

இந்நிலையில், விசைத்தறி நெசவுக்காக, பசை சேர்க்கப்பட்ட பாவு நுால் கட்டுகளை வெயிலில் காய வைக்க முடியாமல் நெசவாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஒன்றியங்களுக்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விசைத்தறி நெசவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

நெசவு மூலப்பொருளான பாவு நுால் கட்டுகளை, சில நாட்களாக வெயிலில் உயர்த்த முடியாமல் நெசவாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதே போல, செங்கல் சூளை நடத்துபவர்களும் கோடை மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். திறந்தவெளியில் வெயிலில் வைக்கப்பட்டுள்ள சுடாத செங்கற்களை பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisement