சூறாவளியுடன் மழை 600 வாழைகள் சேதம்

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் நேற்றுமுன்தினம் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு 600 வாழைகள், 3 தென்னை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
வடமதுரை அடுத்த வேலாயுதம்பாளையம், மூணாண்டிபட்டி பகுதியில் நேற்றுமுன்தினம் மாலையில் பலத்த சூறாவளியுடன் ஒரு மணி நேரம் மழை பெய்தது. சூறாவளி வேகத்தால் வேலாயுதம்பாளையம் பாலசுப்பிரமணி தோட்டத்தில் 200 வாழைகள், ரவிச்சந்திரன் தோட்டத்தில் 400 வாழைகள், நாகராஜ் தோட்டத்தில் 3 தென்னை மரங்கள் முறிந்து விழுந்து சேதமாகின.
பாதிப்பு விபரங்களை வடமதுரை தோட்டக்கலைத்துறை அலுவலர் மைதிலி தலைமையிலான குழுவினர் கணக்கிட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி
-
ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
ரயிலில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்; திரிபுராவில் பரபரப்பு
-
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடு பாகிஸ்தான்; இந்தியாவுக்கு பென்டகன் முன்னாள் அதிகாரி ஆதரவு
-
டில்லி இந்தியா கேட் பகுதிகளில் மக்களுக்கு தடை; சண்டிகரில் எச்சரிக்கை ஒலி
-
பாக்.,கிற்கு பதிலடி கொடுக்க தயார்நிலையில் இந்திய கடற்படை!
Advertisement
Advertisement