குளுனி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை

புதுச்சேரி: குளுனி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பள்ளியின் முதல்வர் ரோசிலி சால்வை அணிவித்து பாராட்டினார்.
லாஸ்பேட்டை, புனித சூசையப்பர் குளுனி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநிலம் மற்றும் பள்ளி அளவில் மாணவி பூஜா 600க்கு 597 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். மாணவி பிரீத்திகா 594 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், மாணவி அதினா 593 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி ரோசிலி சால்வை அணிவித்து, மலர்க்கொத்து மற்றும் இனிப்பு வழங்கி பாராட்டினார்.மேலும், பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் மாணவிகளை வாழ்த்தினர்.
பள்ளியில் பிரெஞ்சில் 13 மாணவிகளும், கணிதத்தில் 1 மாணவியும், வேதியியலில் 2 மாணவிகளும், கணினி அறிவியலில் 17 மாணவிகளும், உயிரியியலில் 1 மாணவியும், கணக்கியலில் 4 மாணவிகளும், வணிகவியலில் 2 மாணவிகளும், பொருளாதாரத்தில் 2 மாணவிகளும், கணினி பயன்பாடுகள் பாடத்தில் 6 மாணவிகளும், வணிக கணிதத்தில் 2 மாணவிகளும் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும்
-
இந்தியாவில் கால் பதிக்கிறது அமெரிக்க பல்கலைக்கழகம்
-
ராணுவத்தில் மாற்றுத்திறனாளிக்கான ஓய்வூதியம்: தாராளமான அணுகுமுறை தேவை: சுப்ரீம் கோர்ட்
-
போரில் ஆர்வமில்லை!
-
தந்தி மாரியம்மன் கோவிலில் விடையாற்றி உற்சவம்
-
தாவரவியல் பூங்கா அருகே நாயை கவ்வி சென்ற சிறுத்தை; 'கிளன்ராக்' பகுதி குடியிருப்பு வாசிகள் 'பீதி'
-
93.97 சதவீதம் பேர் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி; 20 பள்ளிகள் 'சென்டம்'