முகநுாலில் தீவிரவாத குறியீடு; வாலிபர் மீது வழக்குப்பதிவு
கோவை: செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் அஷ்ரப் அலி, 21; டவுன்ஹால் பகுதியில் உள்ள 'பேக்' கடையில் பணியாற்றி வருகிறார். இவரது, 'பேஸ்புக்'கில் கடந்த மாதம், ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பின் குறியீடை காண்பித்து போல் புகைப்படம் பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து, செல்வபுரம் போலீசார் நேற்று முன்தினம் அஷ்ரப் அலி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய தளங்களில் உள்ள பல குழுக்களுக்கு அஷ்ரப் அலி அட்மினாக உள்ளார்.
அனைத்து குழுக்களிலும் இஸ்லாமிய மத கருத்துக்கள் பல பதிவிடப்பட்டுள்ளது. வாலிபரின் இந்த மத ஈடுபாட்டை, தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் தவறான வழியில் பயன்படுத்தக்கூடும் என்ற நோக்கில் போலீஸ் தரப்பில் அவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
எனினும் அவர் தொடர்ந்துஅது போன்ற குழுக்களில் மத ரீதியான கருத்துக்களை பதிவிட்டு வந்தார். மேலும், ஆள் காட்டி விரலை துாக்கி காட்டியபடி போட்டோ பதிவு செய்துள்ளார். இதனால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,' என்றார்.
மேலும்
-
பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் அழிப்பு; உறுதி செய்தது மத்திய அரசு
-
சென்னை, வேலூரில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.4.73 கோடி பறிமுதல்
-
இந்தியா-பாக்., மோதல் எதிரொலி: டில்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து
-
இந்தியா தாக்குதலில் பாக்., ராணுவ தளங்கள், முகாம்கள் சேதம்!
-
பாக்., ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு; நமது படைகளுக்கு உமர் அப்துல்லா பாராட்டு
-
அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை