விதிமீறி வைக்கப்பட்ட பேனர்கள் அண்ணா நகரில் விபத்து அபாயம்

அண்ணா நகர், சென்னையில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திரும்பும் வகையில், அதிக உயரத்தில் வைக்கப்படும், 'கட் அவுட்' எனும் விளம்பர பேனர்களால், விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்தன.

இதனால் எழுந்த சர்ச்சையால், விளம்பர பேனர்களை கட்டுப்படுத்த, தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில், நீதிமன்றங்களும் கடுமையான உத்தரவு பிறப்பித்தது.

சமீபத்தில், சென்னையில் விதிமீறல் பேனர்கள் மாநகராட்சி சார்பில் கணக்கெடுத்தது. இதையடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் கட்டடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இரண்டு மாடி கட்டடங்களுக்கு மேல் பேனர்கள் வைக்கக் கூடாது என, விதி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆனால், அண்ணா நகர் ரவுண்டனாவில் வானுயரும் வகையில், பேனர்கள் வரிசைகட்டி வைக்கப்பட்டுள்ளன.

இதனால், அப்பகுதிகளில் விபத்து அபாயம் நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அவற்றை கண்காணித்து, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement