மாதவரத்திற்கு நேரடி பேருந்து சேவை திருவொற்றியூர் பயணியர் எதிர்பார்ப்பு
திருவொற்றியூர், வடசென்னையின் ஒருமுனையில் திருவொற்றியூர், எண்ணுார் உள்ளது. இங்குள்ள பேருந்து நிலையங்களில் இருந்து, பிராட்வே, வள்ளலார் நகர், எழும்பூர், பூந்தமல்லி, கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு, மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர்.
இங்கிருந்து, வடசென்னை மற்றொரு முனையாக கருதப்படும், மாதவரத்திற்கு செல்ல நேரடி பேருந்து வசதி கிடையாது. மாற்றாக, இரண்டு அல்லது மூன்று பேருந்துகள் மாறி செல்ல வேண்டியுள்ளது.
மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து, திருப்பதி, காளஹஸ்தி மற்றும் தென்மாவட்டங்களுக்கு வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து வசதியை பயன்படுத்துவதற்கு, திருவொற்றியூர், எண்ணுார் மக்கள் பெரும் சிரமம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
தவிர, மாதவரத்தில் இருந்து திருவொற்றியூருக்கு, நேரடியாக பேருந்து அல்லது சிற்றுந்து வசதி ஏற்படுத்தினால், விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவையை பலரும் பயன்படுத்தக் கூடிய சூழல் உருவாகும்.
எனவே, மாநகர போக்குவரத்து கழகம் சுதாரித்து, உடனடியாக திருவொற்றியூர், எண்ணுாரில் இருந்து, மாதவரத்தை இணைக்கும் வகையில், மாநகர பேருந்து அல்லது சிற்றுந்து சேவையை ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
சித்திரை திருவிழா: மாவட்ட கோயில்களில் திருக்கல்யாணம்
-
பழநி கிரி வீதியில் ஆய்வு
-
நாச்சாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்
-
'ஆதார்' எடுக்க போலி 'பான் கார்டு' தயாரித்த 6 பேர் கும்பல் கைது
-
பிளஸ் 2 பொதுத் தேர்வு; மாவட்டத்தில் 94.90 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி மாநில அளவில் 20வது இடம்
-
சோலாருக்கு நெட்வொர்க் கட்டணம்: தொழில்துறையினர் அதிருப்தி